சிவிங்கிப் புலி வளங்காப்புத் திட்டத்தின் அடுத்த கட்டத்திற்காக, கிழக்கு ஆப்பிரிக்க நாட்டிலிருந்து சிவிங்கிப் புலிகளை கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, கென்ய அதிகாரிகளின் தூதுக் குழுவை இந்தியா வரவேற்க உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயம் ஆனது சிவிங்கிப் புலிகளை மறு அறிமுகப்படுத்துவதற்கான இரண்டாவது இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பிரதீப் செபாஸ்டியன் எழுதிய 'The Book Beautiful' என்ற புத்தகத்திற்கான அட்டைப் பட வடிவமைப்பிற்காக பவி மேத்தா, 9வது ஆக்ஸ்போர்டு புக்ஸ்டோர் புத்தக அட்டைப் பட பரிசை (2024) வென்றுள்ளார்.
சமீபத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் முகமையின் அரசுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக் குழுவின் (INC-4) நான்காவது அமர்வானது கனடாவின் ஒட்டாவா நகரில் நடைபெற்றது.
ஆண்டுதோறும் மே 05 ஆம் தேதியானது ஆப்பிரிக்க உலகப் பாரம்பரியத் தினமாக அனுசரிக்கப் படுகிறது.