TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 8 , 2024 200 days 235 0
  • அசாம் மாநிலத்தின் வனவிலங்கு வளங்காப்பாளரான டாக்டர் பூர்ணிமா தேவி பர்மனுக்கு இந்த ஆண்டிற்கான விட்லி தங்க விருது வழங்கப்பட்டுள்ளது.
  • உத்தரகாண்ட் சுற்றுலா மேம்பாட்டு வாரியம் மற்றும் ஸ்டார்ஸ்கேப்ஸ் ஆகியவை இணைந்து, ஒரு விரிவான வானியல் சார் சுற்றுலா அனுபவத்தினை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட நக்சத்ரா சபா எனும் முன்னெடுப்பினைத் தொடங்க கை கோர்த்து உள்ளன.
  • பழம்பெரும் கலைஞர் ராஜா ரவிவர்மா அவர்களின் இந்துலேகா ஓவியத்தின் முதல் அசல் பிரதி கேரளாவின் கிளிமானூர் அரண்மனையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
  • பெரும்பாலும் குஜராத்தின் மேற்குப் பகுதியில் மேற்கொள்ளப்படும் புகழ்பெற்ற ஒரு கைவினை ஜவுளித் தயாரிப்பான அஜ்ரக் என்ற தயாரிப்பிற்குப் புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது.
  • இந்தியத் தேசியக் கொடுப்பனவுக் கழகம் (NPCI) ஆனது, நமீபியாவிற்கான ஒருங்கிணைந்த பண வழங்கீட்டு இடைமுகம் போன்ற உடனடிக் கட்டண முறையை உருவாக்குவதற்காக நமீபியா வங்கியுடன் ஒரு ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது.
  • காஸா பகுதி தொடர்பான செய்தி சேகரிக்கும் பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் 2024 ஆம் ஆண்டிற்கான யுனெஸ்கோ/கில்லர்மோ கானோ உலகப் பத்திரிகை சுதந்திரப் பரிசினைப் பெற்றவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • எண்ணிமப் பொது உள்கட்டமைப்புத் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் முதல் சர்வதேச மாநாடு ஆனது இந்தியாவின் தலைமையில் நடைபெற்றது.
  • சீனாவின் சங்’கே 6 என்பதின் பணியானது நிலவின் தொலைதூரப் பகுதிகளிலிருந்து - பூமியிலிருந்துப் பார்க்க முடியாத பக்கத்திலிருந்து - நிலவுப் பொருட்களைக் கொண்டு வருவதற்கான உலகின் முதல் முயற்சியாகும்.
  • அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மக்கள் தொகை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (CPD57) 57வது அமர்வின் போது, ​​“நிலையான மேம்பாட்டு இலக்குகளை வட்டாரமயமாக்குதல்: இந்தியாவின் உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண்களின் முன்னிலை” என்ற தலைப்பிலான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
    • ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்துடன் (UNFPA) இணைந்து ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்தது.
  • உலகப் போர்த்துகீசிய மொழி தினம் ஒவ்வோர் ஆண்டும் மே 05 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்