நியூஸ்பேப்பர் டிசைன்.இன் என்ற நிறுவனம் ஏற்பாடு செய்த 6வது சர்வதேச செய்தித் தாள் வடிவமைப்புப் போட்டியில் தி ஹிந்து இதழின் விளக்க கட்டுரைப் பக்கம் (Hindu’s explainer) மூன்று விருதுகளை வென்றுள்ளது.
ஓய்வூதியத் துறையானது அரசாங்க ஓய்வூதியதாரர்களுக்கு வேண்டிய ஓய்வூதியக் கொடுப்பனவுகள் மற்றும் அனுமதிகளைக் கண்காணிப்பதற்காக வேண்டி பவிஷ்யா என்ற இயங்கலை தளத்தினைத் தொடங்கியுள்ளது.
KP.2 மற்றும் KP 1.1 வகைகளை உள்ளடக்கிய, FLiRT என அழைக்கப்படும் ஒமைக்ரான் JN.1 மரபு வழியில் உள்ள கோவிட்-19 வகைகளின் பாதிப்பு ஆனது அமெரிக்காவில் வேகமாகப் பரவி வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் ஆனது சமீபத்தில் லெபனான் நாட்டிற்கு 1 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
சிரிப்பதால் ஏற்படும் மகிழ்ச்சியையும் அதன் பல ஆரோக்கிய நன்மைகளையும் மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மே மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று (மே 05) உலக சிரிப்பு தினம் கொண்டாடப்படுகிறது.