TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 10 , 2024 69 days 128 0
  • அரசுக்குச் சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனமானது 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தேசிய அளவில் 4G இணையச் சேவைகளை வழங்க உள்ளது.
  • ஸ்பெயின் நாட்டுக் கால்பந்து குழுமமான ரியல் மாட்ரிட், காடிஸ் அணியினை வீழ்த்தி லா லிகா 2023-24 போட்டித் தொடரில் வெற்றி பெற்றுள்ளது.
  • வரலாற்றில் முதல் முறையாக, உக்ரைனின் வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆனது விக்டோரியா ஷி எனப்படும் ஒரு மெய்நிகர் செயற்கை நுண்ணறிவு செய்தித் தொடர்பாளரினை அறிமுகப் படுத்தியுள்ளது.
    • ரஷ்யாவுடன் நடைபெற்று வரும் போர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்த தகவல்களை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • எடை பாகுபாடு மற்றும் அதிக கொழுப்பு தொடர்பான பயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக என்று மே 06 ஆம் தேதியன்று சர்வதேச உணவுக் கட்டுப்பாடுத் தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Embrace Yourself: Reject Diet Culture, Love You" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்