TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 11 , 2024 68 days 133 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆனது, தமிழ்நாட்டில் மகேந்திர கிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை சோதனை வளாகத்தில் உள்ள பகுதியளவு மீக்குளிர் நிலையிலான எரி தூண்டலுக்கு முன்னதாக தீப்பற்றும் திறன் சோதனை அமைப்பின் முதல் தீப்பற்றல் சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
  • இந்திய இராணுவத்தின் கர்கா படைப்பிரிவு ஆனது, மேற்கத்திய படைப்பிரிவின் கீழ், இந்திய விமானப் படையுடன் இணைந்து மூன்று நாட்கள் அளவிலான ககன் ஸ்ட்ரைக்-II  எனப்படும் கூட்டுப் பயிற்சியை பஞ்சாபில் பல இடங்களில் வெற்றிகரமாக மேற் கொண்டது.
  • பஜாஜ் ஆட்டோ நிறுவனமானது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனது அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவினால் (CNG) இயங்கும் மோட்டார் சைக்கிளின் அறிமுகத்திற்கு தயாராகி வருகிறது.
  • உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் (SCBA) நிர்வாகக் குழுவில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை உச்ச நீதிமன்றம் பெண்களுக்கு ஒதுக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்