TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 13 , 2024 66 days 140 0
  • 126வது ஆண்டு மலர்க் கண்காட்சி உதகமண்டலத்தில் சமீபத்தில் துவங்கியது.
  • மக்களுக்கு "ஆபத்தானவை" என்று கருதப்படும் 33 வகை இன நாய்களை இறக்குமதி செய்யவோ, இனப்பெருக்கம் செய்யவோ அல்லது விற்பனை செய்யவோ தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்புத் துறை தடை விதித்துள்ளது.
  • 2033 ஆம் ஆண்டிற்குள் 30,000 விளையாட்டுச் செயலி உருவாக்க வல்லுநர்களை ஈர்ப்பதன் மூலம் அந்த நகரத்தை உலகளாவிய விளையாட்டுத் துறை மையமாக மாற்றுவதற்காக துபாய் அரசு ஒரு புதுமையான விளையாட்டு துறை சார் நுழைவு இசைவுச் சீட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • சமூக சேவகர் திரு. பவன் சிந்திக்கு 2024 ஆம் ஆண்டிற்கான குளோபல் பிரைடு ஆஃப் சிந்தி விருது வழங்கப்பட்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் வனங்களுக்கான மன்றத்தின் (UNFF19) 19வது அமர்வு ஆனது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது.
  • கூகுள் நிறுவனத்தின் டீப்மைன்ட் என்ற கிளை நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் புரதங்கள், DNA மற்றும் RNA உள்ளிட்ட உயிரியல் மூலக்கூறுகள் மற்றும் மருந்துகளாக செயல்படக் கூடிய சிறிய மூலக்கூறுகளின் கட்டமைப்பு மற்றும் இடைவினைகளை கணிக்க கூடிய AlphaFold 3 என்ற ஒரு செயற்கை நுண்ணறிவு மாதிரியை உருவாக்கி உள்ளனர்.
  • இரண்டாம் உலகப் போரின் போது உயிர் இழந்தவர்களுக்கான நினைவு மற்றும் நல்லிணக்க நேரமானது மே 08-09 ஆம் தேதிகளில் அனுசரிக்கப் பட்டது.
  • 1945 ஆம் ஆண்டில் நாஜி ஜெர்மனிக்கு எதிரான சோவியத் ஒன்றியத்தின் வெற்றியை நினைவு கூரும் வகையில் மே 09 ஆம் தேதியை ரஷ்யா வெற்றி தினமாக அனுசரித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்