காஷி சமூகத்தினைச் சேர்ந்த இடாஷிஷா நோங்ராங் மேகாலயாவின் முதல் பெண் காவல்துறைத் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் காவல்துறையின் முதல் பழங்குடியினப் பெண் ஆவார்.
இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையேயான 'சக்தி' எனப்படும் 7வது கூட்டு இராணுவப் பயிற்சியானது மேகாலயா மாநிலத்தின் உம்ரோய் மாவட்டத்தில் தொடங்கியது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது முன்னாள் பிரதமர் மிகைல் மிஷுஸ்டினை மீண்டும் அப்பதவிக்கு நியமித்துள்ளார்.
சர்வதேச அர்கானியா தினம் அல்லது சர்வதேச அர்கான் மர தினம் ஆனது உலகளவில் அதன் சுற்றுச்சூழல் பெரும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் மேம்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் மே 10 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.
அன்னையர் தினம் என்பது மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையன்றுக் கொண்டாடப் படுகிறது என்பதோடு இந்த ஆண்டு இத்தினம் மே 12 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.