இந்திய இராணுவம் ஆனது தனது முதல் ஹெர்மிஸ்-900 ஸ்டார்லைனர் ஆளில்லா விமானத்தினை விரைவில் பெற உள்ளது.
த்ரிஷ்டி-10 ஆளில்லா விமானம் எனப்படும் ஹெர்மிஸ்-900 ஆனது, இந்திய இராணுவம் மற்றும் கடற்படைக்கு அதானி பாதுகாப்பு நிறுவனங்களால் வழங்கப் படுகிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் சேர்வதற்கான தகுதியை அங்கீகரிப்பதன் மூலம், பாலஸ்தீனிய நாட்டினை ஐக்கிய நாடுகள் சபையின் முழு உறுப்பினராக மாற்றச் செய்வதற்கான ஒரு முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் தனது அதீத வாக்குகளை அளித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்குப் பரிந்துரை செய்துள்ளது.