நேபாளிய ஷெர்பா மலை ஏறும் வீரரான கமி ரிட்டா 28 முறை மலையேறிய அவரதுச் சொந்தச் சாதனையை முறியடித்து, 29வது முறையாக எவரெஸ்ட் மலையினை ஏறி சாதனை படைத்துள்ளார்.
71 ஆண்டு கால மலையேறுதல் வரலாற்றில் உலகின் மிக உயரமான சிகரத்தை அதிக முறை ஏறி சாதனைப் படைத்தவர் என்ற ஒரு பெருமையினை அவர் பெற்று உள்ளார்.
ஐக்கியப் பேரரசு ஆனது, அதன் மக்கள்தொகையில் சுமார் 0.7%, அரை மில்லியன் அளவிலான மக்களின் முழுமையான-மரபணு வரிசையாக்கத்தினை நிறைவு செய்வதாக அறிவித்துள்ளது.
உயிரியல் அறிவியலில் உடனடி மற்றும் நீண்ட கால முன்னேற்றங்களுக்கான தொலைநோக்கு தாக்கங்களுடன் கூடிய இத்தகைய தரவுத் தொகுப்புகள் மாற்றம் மிக்க ஒன்றாக அமையும்.
பட்டினி நிலையினைத் தடுக்கவும், வறுமையைக் குறைக்கவும், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்குமான தாவர ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மே 12 ஆம் தேதியன்று சர்வதேச தாவர ஆரோக்கிய தினம் (IDPH) அனுசரிக்கப் படுகிறது.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'தாவர ஆரோக்கியம், பாதுகாப்பான வர்த்தகம், எண்ணிமத் தொழில்நுட்பம்' என்பதாகும்.