தமிழகத்தைச் சேர்ந்த P ஷியாம்நிகில் அவர்கள் நாட்டின் 85வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தினைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையானது, மே 25 ஆம் தேதியை உலக கால்பந்து தினமாக அறிவித்துள்ளது.
இந்திய அரசாங்கத்தின் பொது ஒளிபரப்புச் சேவை நிறுவனமான பிரசார் பாரதி விரைவில் தனது சொந்த இணையவழி ஒளிபரப்பு சேவை தளத்தினை (OTT) தொடங்க உள்ளது.
சந்திரா சேர்க்கை ஆலோசனை வழங்கீட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சந்திரகாந்த் சதிஜா, "விதர்பா பிராந்தியத்தின் மிகவும் நம்பகமான சேர்க்கை ஆலோசனை வழங்கீட்டு நிறுவனமாக" விளங்குவதற்காக 2024 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த நிறுவனங்கள் விருதை வென்றுள்ளார்.
பாரத் ஸ்டேட் வங்கியானது, காந்திநகரில் உள்ள GIFT நகரில் உள்ள நாட்டின் முதல் தங்க நாணயப் பரிமாற்ற நிறுவனமான இந்திய சர்வதேச நாணய (புல்லியன்) பரிமாற்ற (IIBX) நிறுவனத்தில் அங்கம் பெற்ற முதல் வர்த்தக மற்றும் வர்த்தக மேலாண்மை உறுப்பினராக மாறியுள்ளது.
சர்வதேச அமைதியுடன் ஒன்றுபட்டு வாழ்தலுக்கான தினம் ஆனது உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் மே 16 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.