தேசிய பாதுகாப்புப் படைக்கும் (NSG) அமெரிக்க சிறப்பு நடவடிக்கைப் படைக்கும் (SOF) இடையேயான “தர்காஷ்” எனப்படும் 7வது இந்திய-அமெரிக்க கூட்டுத் தீவிரவாத எதிர்ப்புப் பயிற்சி சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்றது.
TATA AIG நிறுவனமானது, இந்தியாவில் முதல் முறையாக, சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக் கோள்களுக்கான மூன்றாம் தரப்பு பொறுப்புக் காப்பீட்டை அறிமுகப் படுத்தியுள்ளது.
HDFC வங்கியானது, விசா கடன் அட்டை வலையமைப்புகளுடன் சேர்த்து PIXEL எனப்படும் அதன் முதல் மெய்நிகர் கடன் அட்டையினை அறிமுகப்படுத்தியுள்ளது.
சிறுகதையில் வல்லமை பெற்று விளங்கியதற்காக நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் கனடா நாட்டின் ஆலிஸ் மன்ரோ சமீபத்தில் காலமானார்.
2013 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசினையும், 2009 ஆம் ஆண்டில் அவரது படைப்பிற்காக சர்வதேசப் புக்கர் பரிசினையும் அவர் பெற்றுள்ளார்.
ஜப்பானியக் கூட்டமைப்பு ஆனது, சமீபத்தில் உலகின் முதல் அதிவேக 6G முன்மாதிரி சாதனத்தை வெளியிட்டுள்ளது.
இது வினாடிக்கு 100 ஜிகாபிட் வேகத்தில் (Gbps), 300 அடிக்கு மேலான தூர வரம்பிற்கு தரவை அனுப்பும் திறன் கொண்டது.