TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 21 , 2024 187 days 253 0
  • துபாயின் DP வேர்ல்ட் எனப்படும் விநியோகச் சங்கிலி தீர்வுகளை வழங்கும் உலகளாவிய வழங்குநர் நிறுவனம் ஆனது, அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய மூன்று இலவச வர்த்தகக் கிடங்கு மண்டலத்தில் ஒன்றை (FTWZ) சென்னையின் மணலியில் தொடங்க உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு ஆனது நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் நடைபெற்றது.
  • இந்திய இராணுவம் ஆனது, உலகின் மிக உயரமான இரண்டு பீரங்கி பழுதுபார்க்கும் வசதிகளை லடாக்கில் உள்ள மெய்க் கட்டுப்பாட்டுக் கோட்டுப் (LAC) பகுதிக்கு அருகில் நிறுவியுள்ளது.
  • இந்தியக் கால்பந்து வீரர் சுனில் சேத்ரி சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
  • பெங்களூருவில் உள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (IIITB) ஆனது, பக்கவாத நோயாளிகளின் அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய மறுவாழ்வு நல சேவைகளின் போது உதவும் வகையில், இணைய உலக இணைப்புகள் (IoT) செயல் படுத்தப் பட்ட ‘XoRehab’ எனப்படும் சக்கர நாற்காலி சாதனத்தினை உருவாக்கியுள்ளது.
  • மே மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று (மே 17) அமெரிக்காவின் தேசிய அருகி வரும் உயிரினங்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • ஐக்கிய அரபு அமீரகம் ஆனது, 'ப்ளூ ரெசிடென்சி' என்று அழைக்கப்படும் சுற்றுச்சூழல் வாகையர்களுக்கான நீண்ட காலம் வசிப்பதற்கான திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது.
    • இந்த 10 ஆண்டு கால நுழைவு இசைவுச் சீட்டு என்பது குறிப்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மகத்தான அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளை மேற்கொண்ட நபர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • ஆப்பிரிக்காவில் தூய்மையான சமையல் குறித்த தொடக்க உச்சி மாநாடு ஆனது பாரீஸ் நகரில் நடைபெற்றது.
    • இது ஆப்பிரிக்காவில் நிலவும் பாரம்பரிய சமையல் முறைகளால் ஏற்படும் மோசமான உடல்நலம் மற்றும் பருவநிலைத் தாக்கங்களை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்