இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) ஆனது, “பொதுக் கொள்கையை செயல்படுத்துதல்” பிரிவின் கீழ் 2024 ஆம் ஆண்டின் புவி இடம் சார் உலக முன்னணித்துவ விருதினை வென்றுள்ளது.
உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் (SCBA) தலைவராக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
FIFA காங்கிரசில் 2027 ஆம் ஆண்டு மகளிர் உலகக் கோப்பைப் போட்டியினை பிரேசில் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
குஜராத்தின் அம்பாஜியில் வெட்டியெடுக்கப்படும் பளிங்குக் கல் சமீபத்தில் புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளது.
இது அம்பா வெள்ளைப் பளிங்குக் கல் என்றும் அம்பே வெள்ளை பளிங்கு கல் என்றும் அழைக்கப் படுகிறது.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள அனைத்து வானிலையிலும் அணுகக்கூடிய வகையிலான சேலா சுரங்கப்பாதையானது, இங்கிலாந்தின் சர்வதேச கௌரவப் புத்தகத்தில் நாட்டின் மிகவும் உயரமான சுரங்கப் பாதையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
இது கடல் மட்டத்திலிருந்து 13,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஐபேட் ப்ரோ சாதனத்தில் அறிமுகப்படுத்திய 16-செயலாக்க அலகுகள் கொண்ட செயற்கை நுண்ணறிவு முடுக்கிகளை உள்ளடக்கிய M4 சில்லு ஆனது, ஆப்பிள் நிறுவனத்தினால் இயந்திரக் கற்றல் செயலாக்க அலகு (NPU) என குறிப்பிடப் படுகின்றது.