TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 24 , 2024 55 days 126 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது, அதன் வளாகத்தில் IIT-M இசைஞானி இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையத்தினை அமைத்துள்ளது.
  • இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழர்களின் 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூரும் வகையில் வெளியிடப்பட்ட முதல் தபால் தலையை இந்திய ஆன்மீக குரு ரவிசங்கர் பெற்றுக் கொண்டார்.
  • ஐக்கியப் பேரரசு நாட்டினைச் சேர்ந்த விட்லி ஃபண்ட் ஃபார் நேச்சர் (WFN) தொண்டு நிறுவனமானது, இந்திய நாட்டினைச் சேர்ந்த டாக்டர் பூர்ணிமா தேவி பர்மனுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான மதிப்பு மிக்க விட்லி தங்க விருது வழங்கி கௌரவித்துள்ளது.
    • ஓ ஹர்கிலா என்று அன்புடன் அழைக்கப்படும் பெரிய சிப்பாய் நாரைகளை (கிரேட்டர் அட்ஜுடண்ட் ஸ்டோர்க்) மீட்பதற்கான அவரது அசாதாரண பணியை அங்கீகரித்து இந்த விருது வழங்கப் பட்டுள்ளது.
  • தேயிலையின் கலாச்சார மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தை முன்னிலைப் படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட மே 21 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் சர்வதேச தேயிலை தினம் கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்