TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 25 , 2024 54 days 148 0
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான நீதிபதி R. மகாதேவனை தற்காலிக தலைமை நீதிபதியாக நியமித்து உள்ளார்.
  • மாரியப்பன் தங்கவேலு, 2024 ஆம் ஆண்டு உலக  மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதல் T63 இறுதிப் போட்டியில் 1.88 மீட்டருக்கு மேலான உயரத்தினைத் தாண்டி சாம்பியன்ஷிப் போட்டியின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.
  • தமிழகத்தின் சந்துரு G, பஞ்சாப் குத்துச்சண்டை வீரர் ஜஸ்கரன் சிங்கை வீழ்த்தி, WBC இந்தியா அதிக எடை கொண்ட வீரரர்களுக்கான சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றினார்.
  • ஹெலிகாப்டர் விபத்தில் அதிபர் இப்ராஹிம் ரைசி இறந்ததை அடுத்து ஈரானின் முதல் துணை அதிபர் முகமது மொக்பர் ஈரானின் தற்காலிக அதிபராக நியமிக்கப் பட்டு உள்ளார்.
  • புகழ்பெற்ற வங்கியாளரும், ICICI வங்கியின் முன்னாள் தலைவருமான நாராயணன் வகுல் சமீபத்தில் காலமானார்.
  • ஜெர்மனி நாட்டின் டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இத்தாலி ஓபன் ஒற்றையர் பட்டத்தை இரண்டாவது முறையாக வென்று வரலாறு படைத்துள்ளார்.
  • கூகுள் நிறுவனத்தின் கூகுள் I/O 2024 எனப்படும் இந்த ஆண்டிற்கான மிகப்பெரிய வருடாந்திர நிரலாக்க வல்லுநர்களுக்கான நிகழ்வு ஆனது சமீபத்தில் நடைபெற்றது.
  • தாய்லாந்து ஓபன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து BWF தரவரிசையில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி-சிராக் ஷெட்டி மீண்டும் முதல் இடத்தைப் பிடித்தனர்.
  • ITC லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான சஞ்சீவ் பூரி, 2024-25 ஆம் ஆண்டிற்கான இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பின் (CII) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில் ஆடவர்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்