குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான நீதிபதி R. மகாதேவனை தற்காலிக தலைமை நீதிபதியாக நியமித்து உள்ளார்.
மாரியப்பன் தங்கவேலு, 2024 ஆம் ஆண்டு உலக மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதல் T63 இறுதிப் போட்டியில் 1.88 மீட்டருக்கு மேலான உயரத்தினைத் தாண்டி சாம்பியன்ஷிப் போட்டியின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.
தமிழகத்தின் சந்துரு G, பஞ்சாப் குத்துச்சண்டை வீரர் ஜஸ்கரன் சிங்கை வீழ்த்தி, WBC இந்தியா அதிக எடை கொண்ட வீரரர்களுக்கான சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றினார்.
ஹெலிகாப்டர் விபத்தில் அதிபர் இப்ராஹிம் ரைசி இறந்ததை அடுத்து ஈரானின் முதல் துணை அதிபர் முகமது மொக்பர் ஈரானின் தற்காலிக அதிபராக நியமிக்கப் பட்டு உள்ளார்.
புகழ்பெற்ற வங்கியாளரும், ICICI வங்கியின் முன்னாள் தலைவருமான நாராயணன் வகுல் சமீபத்தில் காலமானார்.
ஜெர்மனி நாட்டின் டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இத்தாலி ஓபன் ஒற்றையர் பட்டத்தை இரண்டாவது முறையாக வென்று வரலாறு படைத்துள்ளார்.
கூகுள் நிறுவனத்தின் கூகுள் I/O 2024 எனப்படும் இந்த ஆண்டிற்கான மிகப்பெரிய வருடாந்திர நிரலாக்க வல்லுநர்களுக்கான நிகழ்வு ஆனது சமீபத்தில் நடைபெற்றது.
தாய்லாந்து ஓபன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து BWF தரவரிசையில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி-சிராக் ஷெட்டி மீண்டும் முதல் இடத்தைப் பிடித்தனர்.
ITC லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான சஞ்சீவ் பூரி, 2024-25 ஆம் ஆண்டிற்கான இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பின் (CII) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில் ஆடவர்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.