TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 26 , 2024 53 days 140 0
  • இந்தியப் பாதுகாப்புப் படையின் இணையவெளி முகமையானது, நாட்டிலுள்ள அனைத்து இணையவெளிப் பாதுகாப்பு அமைப்புகளின் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதற்காக சைபர் சுரக்சா - 2024 என்ற பயிற்சியை நடத்தியது.
  • இந்திய வம்சாவளி அமெரிக்க அறிவியலாளரும், கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் பேராசிரியருமான ஸ்ரீனிவாஸ் R. குல்கர்னிக்கு 2024 ஆம் ஆண்டிற்கான வானியலுக்கான ஷா பரிசு வழங்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் (ISA) 99வது உறுப்பினராக ஸ்பெயின் நாடு இணைந்துள்ளது.
  • ஜப்பானில் நடைபெற்ற உலக மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தீப்தி ஜீவன்ஜி உலக சாதனை படைத்து தங்கம் வென்றுள்ளார்.
    • அவர் 400 மீ T20 பந்தயத்தினை வெறும் 55.07 வினாடிகளில் நிறைவு செய்து, 2023 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பிரேனா கிளார்க் படைத்த 55.12 வினாடிகள் என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.
  • ஷீ ஜின்பிங் சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட புதிய பெரிய மொழி மாதிரி (LLM) செயற்கை நுண்ணறிவு அமைப்பினை சீனா அறிமுகப் படுத்தியுள்ளது.
    • இது இணைய வெளிப் பாதுகாப்பின் மீது கடுமையான ஒழுங்குமுறைக் கட்டுப்பாட்டினை மேலாண்மை செய்வதோடு, பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவினை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்