2024 ஆம் ஆண்டு ATD BEST விருதுகளில் உலகளவில் 3வது தரவரிசையைப் பெற்றதன் மூலம் தேசிய அனல் மின் கழகம் (NTPC) ஒரு அற்புதமான மைல்கல்லை எட்டியுள்ளது.
விண்வெளிக்கு ஒரு குறுகிய பொழுதுபோக்குப் பயணத்தை மேற்கொண்ட ஆறு விண்வெளி சுற்றுலாப் பயணிகளில் இந்தியாவில் பிறந்த விமானி கோபி தோட்டகுராவும் ஒருவர் ஆவார்.
2024 ஆம் ஆண்டு சியோல் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு ஆனது, தென் கொரிய மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இணைந்து நடத்தப்பட்டது.
10வது உலக நீர் மன்றம் இந்தோனேசியாவின் பாலி நகரில் “பகிரப்பட்ட செழுமைக்கான நீர்” என்ற தலைப்பில் நடைபெற்றது.
மாலத்தீவுகள் "அந்நாட்டு நாணயமான Rufiyaa-வின் சேவையினை மேம்படுத்தச் செய்வதற்காக" இந்தியாவின் RuPay சேவையை விரைவில் தொடங்க உள்ளது.
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம், குப்பைக் கிடங்கில் கொட்டப்படாமல் முழுவதும் கழிவகற்றிய (ZWL) விமான நிலையம் என்ற பெருமையைப் பெற்ற இந்தியாவின் முதல் விமான நிலையமாக வரலாறு படைத்துள்ளது.