2024 ஆம் ஆண்டு IPL போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது மூன்றாவது IPL பட்டத்தினை வென்றுள்ளது.
IUCN அமைப்பின் முதல் உலகளாவியச் சதுப்புநில மதிப்பீட்டின்படி, தென்னிந்தியக் கடற்கரையோரங்களில் உள்ள சதுப்புநிலங்கள், குறிப்பாக தமிழகத்தை உள்ளடக்கிய கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகள், மிகவும் அருகி வரும் நிலையில் உள்ள பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் நகரைச் சேர்ந்த 18 வயது ரிக்சா ஓட்டுநர் ஆர்த்தி, இலண்டனில் அமல் குளூனி மகளிர் அதிகாரமளிப்பு விருதைப் பெற்றுள்ளார்.
பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளால் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்படும் பணிகள் மற்றும் பதவிகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவதை கர்நாடக அரசு தற்போது கட்டாயமாக்கியுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் குழுவானது (IOC) ‘Let’s Move India’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.
பாரீஸ் நகரில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களைக் கொண்டாடுவதற்காக மக்களை ஊக்குவிப்பதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும்.
2023-24 ஆம் ஆண்டில் மாநில மின் பகிர்மான நிறுவனங்களால் மின்பகிர்மானக் கம்பி வடங்களை இணைத்ததன் அடிப்படையில் உத்தரப் பிரதேச மாநிலம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
அதைத் தொடர்ந்து குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகியவை இடம் பெற்றுள்ளன.
தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் 2024 ஆம் ஆண்டின் மூன்றாவது போலியோ நோய்ப் பாதிப்பு பதிவாகியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளில் மட்டுமே போலியோ இன்னும் பொதுவாக காணப்படுகிறது.