திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரி (CET) மற்றும் சென்னையின் இந்தியத் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் (IIT) ஆகியவை இணைப்பு இல்லாத மின்னழுத்த அளவீட்டுச் சாதனத்தை வடிவமைப்பதற்கான காப்புரிமையைப் பெற்றுள்ளன.
எண்ணிமப் பொருளாதாரத்திற்கான இயங்குதிறன் அறக்கட்டளை (FIDE) பயனரின் சார்பாக வணிகப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளக்கூடிய பல் வலையமைப்பு செயற்கை நுண்ணறிவு முகவு அமைப்பினை வெளியிட்டுள்ளது.
GAIL (இந்தியா) லிமிடெட் நிறுவனமானது, தேசியப் பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசத்தின் விஜயப்பூரில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் 10 மெகாவாட் திறன் கொண்ட பசுமை ஹைட்ரஜன் ஆலையை திறந்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மலையேறும் வீரரும் கிரிக்கெட் வீரருமான கபக் யானோ, எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்த முதல் நிஷி பழங்குடிப் பெண் என்ற வரலாற்றினைப் படைத்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜோதி ராத்ரே (55) எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இந்தியாவின் முதியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
நேபாளத்தைச் சேர்ந்த பூர்ணிமா ஸ்ரேஸ்தா, ஒரே பருவத்தில் 13 நாட்களில் மூன்று முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய உலகின் முதல் பெண் என்ற ஒரு வரலாற்றினைப் படைத்துள்ளார்.
ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், 2024 ஆசிய முதுநிலை சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் வால்ட் பிரிவில் பட்டத்தை வென்றதன் மூலம் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
ஃபெராரி கார் பந்தய வீரரான சார்லஸ் லெக்லெர்க், 2024 மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில் வென்ற முதல் மொனாக்கோவைச் சேர்ந்த பந்தய ஓட்டுநர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
திரைப்படத் தயாரிப்பாளர் பயல் கபாடியா, 'All We Imagine As Light' என்ற அவரது திரைப் படம் ஆனது 2024 ஆம் ஆண்டு பிரான்ஸ் கேன்ஸ் திரைப்பட விருது விழாவில் மதிப்பு மிக்க கிராண்ட் பிரிக்ஸ் விருதினை வென்றதையடுத்து ஒரு வரலாற்றினைப் படைத்து உள்ளார்.
2024 ஆம் நிதியாண்டில் 42% வளர்ச்சியுடன் சுமார் 15.6 பில்லியன் டாலராக ஏற்றுமதி உயர்ந்ததையடுத்து திறன்பேசிகள் ஆனது இந்தியாவில் அதிகம் ஏற்றுமதி செய்யப் படும் நான்காவது பொருளாக மாறியுள்ளது.
இந்தியாவின் முதன்மையான நீர்மின்னாற்றல் உற்பத்தி நிறுவனமான தேசிய நீர் மின்னாற்றல் கழகம் ஆனது (NHPC) ‘தி எகனாமிக்ஸ் டைம்ஸ் இதழின் 2024-25 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க ‘The Economic Times HR World Future Ready Organization’ என்ற விருதினைப் பெற்றுள்ளது.