டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற WAN-IFRA 2024 எண்ணிம ஊடக விருதுகளில், தி இந்து நிறுவனத்தின் ‘Made of Chennai’ என்ற பிரச்சாரமானது ‘சிறந்த பார்வையாளர் ஈடுபாடு’ பிரிவில் விருதினை வென்றது.
சென்னையில் உலக விளையாட்டு நகரத்தினை அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தியாவின் முதல் பல் மாதிரி தளவாடப் பூங்காவினை சென்னைக்கு அருகில் உள்ள மப்பேடு என்ற இடத்தில் அமைக்க உள்ளது.
தொலைத்தொடர்புத் துறை (DoT) ஆனது, மத்திய உள்துறை அமைச்சகத்துடன், சஞ்சார் சாதி முன்னெடுப்பின் கீழ் மோசடி குறுஞ்செய்தி மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தியப் பெண் அமைதிப்படை வீராங்கனை மேஜர் ராதிகா சென், ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்புமிக்க 2023 ஆம் ஆண்டு இராணுவப் பாலின ஆதரவாளர் விருதை பெற்றுள்ளார்.
மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது இந்தியாவின் முதல் குவாண்டம் வைர நுண் சில்லுகள் பதிவுக் கருவியினை உருவாக்குவதற்காக டாடா ஆலோசனை சேவைகள் வழங்கீட்டு நிறுவனத்துடன் ஓர் உத்திசார் கூட்டாண்மையில் ஈடுபட்டுள்ளது.
இந்திய மலையேறும் வீரரான சத்யதீப் குப்தா ஒரு பருவத்தில் இரண்டு முறை எவரெஸ்ட் மற்றும் லோட்சே மலைச் சிகரத்தில் ஏறிய முதல் நபர் என்ற ஒரு வரலாற்றைப் படைத்துள்ளார்.
எவரெஸ்ட் சிகரத்திலிருந்து 11 மணி நேரம் 15 நிமிடங்களில் லோட்சே மலையை அடைந்த முதல் இந்தியர் என்றச் சாதனையையும் அவர் படைத்து உள்ளார்.
நான்காவது சர்வதேச வளர்ந்து வரும் சிறு தீவு நாடுகள் (SIDS4) மாநாடானது ஆன்டிகுவா மற்றும் பார்புடாவின் செயின்ட் ஜான்ஸ் நகரில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் கருத்துரு: "Charting the course toward resilient prosperity" என்பது ஆகும்.