தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் தமிழ்த் தாளில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று மனிதவள மேலாண்மைத் துறை பிறப்பித்த ஒரு அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ராகேஷ் ரஞ்சன், பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் (SSC) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய விமானப்படையானது அமெரிக்காவின் அலாஸ்காவில் ரெட் ஃப்ளாக் எனப் படும் 16 நாட்கள் அளவிலான ஒரு மாபெரும் பலதேச ராணுவப் பயிற்சியில் பங்கேற்கிறது.
டாடா குழுமம், இந்திய சீரம் நிறுவனம் (SII) மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) நிறுவனம் ஆகியவை 2024 ஆம் ஆண்டில் உலகின் மிக முக்கியமான நிறுவனங்களாக டைம் இதழால் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்திய விண்வெளி சார் புத்தொழில் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ், மாற்றமிக்க உலகின் முதல் ஒற்றை-துண்டு முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட ஏவுகல இயந்திரத்தினால் இயக்கப்படுகின்ற தனது முதல் சுற்றுப்பாதை சார் நிலை சோதனை வாகனத்தை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஏவுகலம் ஆனது தனுஷ் எனப்படும் அதன் இடம் நகர்த்தக் கூடிய ஏவுதளம் மூலம் எந்த இடத்திலிருந்தும் ஏவக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிச் சபையானது, "PRAGATI-2024" (ஆயுர்கியான் மருந்து ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்கம்) என்ற புதியதொரு முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
இது ஆயுர்வேதத் துறையில் கூட்டு ஆராய்ச்சி மற்றும் பல்வேறு புதுமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.