TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 4 , 2024 44 days 156 0
  • தேசியப் பங்குச் சந்தைக் குறியீடுகள் லிமிடெட் நிறுவனம் ஆனது, இந்தியாவின் முதல் மின்சார வாகனப் பங்குகள் (EV) குறியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது, பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்திற்கு (NIMHANS) 2024 ஆம் ஆண்டிற்கான சுகாதார மேம்பாட்டிற்கான நெல்சன் மண்டேலா விருதினை வழங்கியுள்ளது.
  • நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) ஆகியவை ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக நிலவிற்கான தரப்படுத்தப்பட்ட நேர அமைப்பை உருவாக்க ஒத்துழைப்பினை மேற்கொண்டுள்ளன.
  • இந்தியக் குத்துச்சண்டை கூட்டமைப்பு (BFI) ஆனது, புதிதாக அமைக்கப்பட்ட உலக குத்துச் சண்டை அமைப்பில் சேர ஒப்புதல் அளித்துள்ளது.
    • சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) ஆனது, சர்வதேச குத்துச்சண்டைச் சங்கத்தினை (IBA) அங்கீகரிப்பதற்கு மறுத்ததையடுத்து இது உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்