TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 6 , 2024 42 days 125 0
  • அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வங்கிக் கணக்குகளைத் தொடங்குமாறு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, முதல் முறையாக 10 ஆண்டு கால பசுமைப் பத்திரங்களின் ஏலத்தை ரத்து செய்துள்ளது.
  • பாகிஸ்தான் நாடானது, அதன் நட்பு நாடான சீனாவின் உதவியுடன் அதிவேக இணைய இணைப்பிற்காக PAKSAT MM1 என்ற பல்-பயன்பாட்டுத் தகவல் தொடர்பு செயற்கைக் கோளை விண்ணில் ஏவியுள்ளது.
  • மெக்சிகோவின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கிளாடியா ஷீன்பாம் நாட்டின் 200 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • ரியல் மாட்ரிட் அணியானது 15வது UEFA கால்பந்து சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பட்டத்தை வென்று சாதனையைப் படைத்துள்ளது.
  • புளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டின் படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியைப் பின்னுக்கு தள்ளி, ஆசியாவின் மிகப் பெரியப் பணக்காரர் என்ற பட்டத்தினைக் கௌதம் அதானி மீண்டும் பெற்றுள்ளார்.
  • மும்பை உயர்நீதிமன்றத்தின் கோவா அமர்வு நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதி M.S. சோனக், கோவாவில் "உயிரோடுள்ள போதே உயில்" பதிவு செய்த முதல் நபர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
    • அவரால் சொந்தமாக முடிவெடுக்க முடியாத பட்சத்தில் அவரது குடும்பத்திற்கு வழங்கப் படும் முன்கூட்டிய மருத்துவம் சார் வழிகாட்டல் அது ஆகும்.
  • உச்சநீதிமன்றம் ஆனது, நீதிபதி ஹிமா கோலியின் தலைமையின் கீழ் பாலின உணர்வு மற்றும் உள் புகார்கள் குழுவை மீண்டும் அமைத்துள்ளது.
    • இந்தக் குழுவில் சட்டம், சட்டப் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் மற்றும் பிறர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மொத்தம் 12 உறுப்பினர்கள் உள்ளனர்.
  • தங்களின் வாழ்க்கையில் பயங்கரமான அனுபவங்களைச் எதிர்கொண்ட அப்பாவிக் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வேண்டி, வன்முறைகளால் பாதிக்கப் பட்ட அப்பாவிக் குழந்தைகளுக்கான சர்வதேச தினம் ஆனது ஜூன் 04 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்