TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 8 , 2024 169 days 176 0
  • NPCI சர்வதேசப் பண வழங்கீட்டு நிறுவனம் (NIPL) மற்றும் பெரு மத்திய ரிசர்வ் வங்கி (BCRP) ஆகியவற்றின் கூட்டிணைவானது உலக அளவிலான ஒருங்கிணைந்த பண வழங்கீட்டு இடைமுகப் பரிவர்த்தனைகள் (UPI) தொழில்நுட்பத்தைப் பின்பற்றும் தென் அமெரிக்காவின் முதல் நாடாக பெருவினை மாற்றியுள்ளது.
  • உலக சுகாதார அமைப்பானது, தொற்றுள்ள விலங்குகளுடன் எந்தவிதத் தொடர்பும் கொண்டிராத 59 வயதுடைய மெக்சிகன் மனிதர், பறவைக் காய்ச்சலின் H5N2 துணை வகை வைரசினால் உயிரிழந்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
  • விண்வெளியில் ஒட்டுமொத்தமாக 1,000 நாட்களைச் செலவழித்த முதல் நபர் என்ற சாதனையை ரஷ்ய விண்வெளி வீரரான ஒலெக் கொனோனென்கோ படைத்துள்ளார்.
  • ஐக்கியப் பேரரசில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவப்படம் கொண்ட ரூபாய் தாளினை இங்கிலாந்து வங்கி வெளியிட்டுள்ளது.
  • பூமியின் சுற்றுப்பாதையில் நீண்ட காலத்திற்கு மனிதச் செயல்பாடுகளை மேற் கொள்வதற்கு, ஐரோப்பிய விண்வெளி முகமையின் (ESA) விண்வெளிச் சிதைவுகள் இல்லாத மேலாண்மை சாசனத்தில் 12 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
  • சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியமானது (ITU), உலகளாவியத் தகவல் சமுதாய மன்றம் (WSIS)+20 பற்றிய 2024 ஆம் ஆண்டின் உலக உச்சி மாநாடு எனப்படும் ஓர் உயர்மட்ட நிகழ்வினை நடத்தியது.
  • "கைபேசி வழியிலான தகவல் பரப்பு அவசர எச்சரிக்கை நுட்பம் மூலம் தொலைபேசி மூலமான பேரிடர் நெகிழ்திறன்" என்ற திட்டத்திற்காக, தகவல் தொலைத்தொடர்பு மேம்பாட்டு மையத்திற்கு (C-DOT) WSIS+ 20 மன்றத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் WSIS 2024 "சாம்பியன்" விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • தார்வாதின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது, தீயணைப்புப் பணிகளில் மீட்பு நடவடிக்கைகளுக்கு துணை புரியும் முதல் வகையிலான ஆளில்லா விமானத்தை உருவாக்கியுள்ளது.
    • இந்த ஆளில்லா விமானமானது சிறிய அறைகள் மற்றும் அதிக வெப்பநிலையிலும் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்ற வகையில் இது பல சிக்கல்கள் நிறைந்த பகுதிகளில் தீயை அணைப்பதில் போராடுவதற்கு முக்கியமானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்