சிக்கோடியைச் சேர்ந்த பிரியங்கா ஜார்கிஹோலி என்பவர் சுதந்திரம் பெற்றது முதல் கர்நாடகாவில் பிரத்தியேகமாக இட ஒதுக்கீடு செய்யப்படாத தொகுதியில் இருந்து பாராளுமன்றத்தில் உறுப்பினர் பதவியினைப் பெற்ற இளம் பழங்குடியினப் பெண் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
உலகளவில் 330க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) வருடாந்திரக் கூட்டத்தினை அடுத்த ஆண்டு இந்தியா நடத்தவுள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடுத்த படியாக நெதர்லாந்து என்பது இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி நாடாக உருவெடுத்துள்ளது.
அசாமில் கௌஹாத்திக்கு அருகில் புதியதொரு இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தினை (IIM) அமைக்க இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மும்பை காவல்துறையின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவான ஃபோர்ஸ் ஒன் பிரிவின் தலைவரான கிருஷ்ண பிரகாஷுக்கு மதிப்பு மிக்க வருடாந்திர இந்தி சாகித்ய பாரதி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
ஸ்லோவேனியா நாட்டின் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்ததையடுத்து, சுயாட்சி கொண்ட பாலஸ்தீனிய அரசினை அங்கீகரித்த 9வது ஐரோப்பிய ஒன்றிய நாடு ஆக மாறியுள்ளது.
தென் கொரிய நாடானது தனது விண்வெளித் துறையில் கொள்கை மற்றும் தொழில் துறை வளர்ச்சியை வழிநடத்துவதற்காக, கொரிய வான்வெளி நிர்வாக (KASA) அமைப்பினை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகள் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு (UNCTAD) அமைப்பு மற்றும் பார்படாஸ் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய விநியோகச் சங்கிலி மன்றம் ஆனது சமீபத்தில் நிறைவடைந்தது.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, கடந்த 20 ஆண்டுகளில் மீண்டும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற முதல் சபாநாயகர் ஆவார்.
இதற்கு முன்பு மக்களவையின் சபாநாயகராக இருந்து மீண்டும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், 1996 முதல் 1998 ஆம் ஆண்டு வரை 11வது மக்களவையின் சபாநாயகராக இருந்த P.A. சங்மா ஆவார்.
ரஷ்ய மொழி தினம் ஆனது, புகழ்பெற்ற ரஷ்ய கவிஞர் அலெக்சாண்டர் புஷ்கின் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 06 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.