இந்தியா-கென்யா கூட்டு வர்த்தகக் குழுவின் 8வது கூட்டம் கென்யாவின் நைரோபியில் நடைபெற்றது.
பாஜக தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாயி பற்றிய புத்தகமான ‘அடல் ஜி நே கஹா’ (Atal Ji Ne Kaha) ஆனது பிரதமரால் வெளியிடப்பட்டது. இப்புத்தகம் பிரிஜேந்திர ரெஹியால் எழுதி தொகுக்கப்பட்டது. இவர் இதற்கு முன் புகழ்பெற்ற தூர்தர்ஷன் தயாரிப்பாளராகவும், மூத்த பத்திரிக்கையாளராகவும் இருந்தவர் ஆவார்.
காங்க்டாக்-ன் ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் சிக்கிமின் 16வது ஆளுநராக கங்கா பிரசாத் பதவியேற்றார். இவ்விழாவில் இடைக்கால சிக்கிம் உயர் நீதிமன்ற நீதிபதியான மீனாட்சி எம்.ராய் பிரசாத் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு முன் ஆளுநராக இருந்த சீனிவாஸ் பாட்டீல்-ஐத் தொடர்ந்து இவர் பதவியேற்றுள்ளார்.
உத்திரக்காண்டின் 7வது ஆளுநராக பாபா ராணி மௌரியா பதவியேற்றார். உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ராஜீவ் சர்மா டேஹ்ராடூனிலுள்ள ராஜ்பவனில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கிருஷண் காந்த் பால்-ஐத் தொடர்ந்து மௌரியா ஆளுநராகியுள்ளார்.
மேலும் இவர் மார்கரேட் என்பவருக்கு (ஆகஸ்ட் 2009 முதல் மே 2012 வரை) அடுத்து உத்தரகாண்ட் ஆளுநராகும் இரண்டாவது பெண்மணி ஆவார்.