தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக பாராளுமன்ற உறுப்பினரான கனிமொழி, அந்தக் கட்சியின் பாராளுமன்றக் கட்சித் தலைவராக TR பாலுவிற்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒடிசாவின் கியோன்ஜார் தொகுதியில் இருந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோகன் மஜ்ஹி, ஒடிசாவின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்த மாநிலத்தின் 15வது முதல்வரும் 3வது பழங்குடி முதல்வருமான இவர் இந்த மாநிலத்திற்கான பாஜக கட்சியின் முதலாவது முதல்வர் ஆவார்.
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (SKM) அமைப்பின் தலைவர் பிரேம் சிங் தமாங் ஜூன் 10 ஆம் தேதியன்று தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.
டியூப் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் இந்தியா (TII) நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் வெள்ளையன் சுப்பையா 2024 ஆம் ஆண்டின் சிறந்த EY உலகத் தொழில்முனைவோராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய இராணுவம் வித்யுத் இரக்சக் என்ற புதிய இணைய வசதியில் இயங்கும் சாதன பொருட்களின் இணைப்பு உலகம் (IoT-இணைய உலகம்) மூலம் செயல்படும் ஒருங்கிணைந்த மின்னியற்றிக் கண்காணிப்பு, பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பினை அறிமுகப் படுத்தியுள்ளது.
சுஹெல்வா வனவிலங்கு சரணாலயத்தில் புலிகள் காணப்படுவதற்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து, விரைவில் உத்தரப் பிரதேசத்தில் இது புதிய புலிகள் வளங்காப்பகமாக நிறுவப்படவுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் 5வது புலிகள் சரணாலயமான இது இந்தியாவின் 56வது புலிகள் சரணாலயமாகும்.
விண்வெளியில் நிலவில் இருந்து ‘புவி உதிக்கும் காட்சியினை’ புகைப்படம் எடுத்த அப்பல்லோ 8 விண்கலத்தின் விண்வெளி வீரர் வில்லியம் ஆண்டர்ஸ் விமான விபத்தில் உயிரிழந்தார்.
2023 ஆம் ஆண்டு கொள்கலன் துறைமுகம் செயல்திறன் குறியீட்டில் (CPPI 2023), அரசுக்குச் சொந்தமான விசாகப்பட்டினம் துறைமுகம் முதல் 20 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது.
இது உலக வங்கி மற்றும் S&P உலகச் சந்தைத் தகவல் வழங்கீட்டு அமைப்பு ஆகியவற்றினால் உருவாக்கப்பட்டது.
அகில இந்திய டென்னிஸ் சங்கம் (AITA) ஆனது பயிற்சியாளர் நர் சிங்கிற்கு வாழ்நாள் சாதனைக்கான திலீப் போஸ் விருதினை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பெண் பயிற்சியாளர்களுக்கான AITA சங்கத்தின் புதிய வாழ்நாள் சாதனை விருது 69 வயதான ரோகினி லோகண்டேவிற்கு வழங்கப்படவுள்ளது.