TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 14 , 2024 34 days 125 0
  • கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் 3.18 ஏக்கர் நிலப்பரப்பில் 99.99 கோடி செலவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் ஒரு திட்டத்தை தமிழக அரசு முன்மொழிந்துள்ளது.
  • துணைக் கடற்படை அதிகாரி அனாமிகா P. இராஜீவ் இந்தியக் கடற்படையின் முதல் பெண் ஹெலிகாப்டர் பைலட் ஆனார்.
  • இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (இந்தியா எக்ஸிம் வங்கி) சமீபத்தில் நைரோபி நாட்டில் தனது கிழக்கு ஆப்பிரிக்கச் சார்நிலை அலுவலகத்தினைத் திறந்து வைத்துள்ளது.
  • சுவிட்சர்லாந்த் நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் (ILC) 112வது அமர்வில் திருமதி சுமிதா தவ்ரா தலைமையிலான இந்திய முத்தரப்புக் குழு பங்கேற்றது.
  • உத்தரகாண்டின் டேராடூனில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபை-இந்திய பெட்ரோலியக் கல்வி நிறுவனத்தில் (CSIR-IIP) 3வது இந்தியப் பகுப்பாய்வு மாநாடு (IAC) நடைபெற்றது.
  • OECD/G20 அமைப்பின் வரி விதிப்பு மதிப்பீட்டுத் தளம் மற்றும் பங்குப் பகிர்வு (BEPS) மீதான உள்ளார்ந்தக் கட்டமைப்பு குறித்த 16வது கூட்டம் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடந்தது.
  • செழுமைக்கான இந்திய-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு (IPEF) தூய்மையானப் பொருளாதார முதலீட்டாளர் மன்றம் ஆனது சிங்கப்பூரில் நடைபெற்றது.
  • கண் தானத்தின் மாற்றமிக்க ஆற்றலைப் பற்றி பொதுமக்களுக்கு உணர்த்துவதற்காக ஜூன் 10 ஆம் தேதியன்று உலகக் கண் தான தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • அனைத்து மக்களும், குறிப்பாக குழந்தைகள், விளையாட்டின் பயன்களைப் பெற்று, அவர்களின் முழுத் திறனுடன் செழித்து வளர, விளையாடும் பழக்கத்தினைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும், முன்னுரிமை அளிக்கவும், 2024 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதியன்று முதல் முறையாக சர்வதேச விளையாட்டு தினம் அனுசரிக்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்