TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 16 , 2024 161 days 200 0
  • இந்தியாவின் பூஜா தோமர், அமெரிக்காவில் நடைபெற்ற அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப் (UFC) போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியக் கலப்பு தற்காப்புக் கலை வீராங்கனை என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • மத்திய அரசானது, இராணுவத்தின் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதியை அடுத்த இராணுவத் தளபதியாக நியமித்துள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபையானது 2025 ஆம் ஆண்டினை 'சர்வதேச குவாண்டம் (துளிம) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆண்டாக'  நியமித்துள்ளது.
  • 8வது ஜப்பான் இந்தியா கடல்சார் பயிற்சி - 24 (JIMEX - 24) ஆனது ஜப்பானில் உள்ள யோகோசுகா நகரில் தொடங்கியது.
  • தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினரான விஜய பாரதி சயானி, ஜூன் 02 ஆம் தேதி முதல் அந்த அமைப்பின் தற்காலிகத் தலைவராகப் பொறுப்பேற்று உள்ளார்.
  • 2024 ஆம் ஆண்டிற்கான காந்தர் பிராண்ட்ஸ் அமைப்பின் மிகவும் மதிப்பு மிக்க உலகளாவிய நிறுவனங்கள் என்ற அறிக்கையின் படி, இன்ஃபோசிஸ் நிறுவனமானது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகின் மிக மதிப்பு மிக்க 100 நிறுவனங்களில் ஒன்றாக (74வது) இடம் பிடித்துள்ளது.
    • 100 முன்னணி நிறுவனங்கள் என்ற இந்தப் பட்டியலில் இந்தியாவிலிருந்து TCS, இன்போசிஸ் மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ள நிலையில் இதில் ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் ஆகியன முன்னணியில் உள்ளன.
  • இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பானது (FICCI) ஜோதி விஜ் என்பவரை அதன் இயக்குநராக நியமித்துள்ளது.
  • மத்தியப் பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தில் உள்ள அஷ்டா எனுமிடத்தில் ஈத்தேன் மூலக்கூறினை நெகிழிப் பொருட்களாக மாற்றும் 1500 KTA திறன் கொண்ட ஒரு ஆலையினை அமைக்க உள்ளதாக GAIL அறிவித்துள்ளது.
  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மகளிருக்கான 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ​​போட்டியின் இறுதிப் போட்டியில் 1 நிமிடம், 52.23 வினாடிகளில் நிறைவு செய்து ஆஸ்திரேலியாவின் ஆரியர்னே டிட்மஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
  • மலாவி நாட்டின் துணை அதிபர் சௌலோஸ் சிலிமாவின் விமானம் மலாவி நாட்டில் உள்ள சிக்கங்காவா மலைத் தொடரில் விழுந்து நொறுங்கியதில் அவர் உட்பட பத்து பேர் உயிரிழந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்