TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 17 , 2024 14 days 109 0
  • மோதிலால் ஓஸ்வால் பரஸ்பர நிதியம் ஆனது, இந்தியாவில் பாதுகாப்பு துறை சார்ந்த, நிஃப்டி இந்தியா பாதுகாப்பு குறியீட்டு நிதி என்ற பெயரிலான சந்தைக் குறியீட்டினை ஒத்த முதல் குறியீட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • அஜித் தோவலை தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் நியமித்திட வேண்டி அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
    • மத்திய அரசானது P.K. மிஸ்ராவினை பிரதமரின் முதன்மைச் செயலாளராக மீண்டும் நியமித்துள்ளது.
  • இந்தியப் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் "I Have the Streets: A Kutti Cricket Story" என்ற தலைப்பிலான தனது சுயசரிதையை வெளியிட்டுள்ளார்.
  • 92 வயதான இந்திய செவ்வியல் இசைக் கலைஞர், சரோத் கலைஞர் பண்டிட் இராஜீவ் தாராநாத் காலமானார்.
  • தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் ஆனது, புதியக் குற்றவியல் சட்டங்கள் பற்றிய விரிவான தகவல்களை வழங்குவதற்காக "குற்றவியல் சட்டங்களின் NCRB சங்கலன்" எனப்படும் கைபேசிச் செயலியினை ஜூலை 01 ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்த உள்ளது.
  • ஆப்பிள் நிறுவனமானது, தனது வருடாந்திர உலகளாவிய மென்பொருள் வடிவமைப்பாளர்கள் மாநாட்டில் ஆப்பிள் இண்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஆப்பிள் நிறுவனமானது 3.3 டிரில்லியன் டாலர்களுடன் உலகின் மிகவும் மதிப்பு மிக்க நிறுவனமாக மீண்டும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தினை விஞ்சியுள்ளது.
  • சீனாவின் வுஹான் நகரம் ஆனது, 500 ஓட்டுநர் இல்லாத கார்களின் சோதனையை மேற் கொள்வதன் மூலம் உலகின் மிகப்பெரிய தானியங்கு மகிழுந்துகளின் சோதனையை தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்