இந்தியாவிலேயே முதன்முறையாக, கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC) ஆனது, பணியின் போது உயிரிழந்த நான்கு ஊழியர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு விபத்துக் காப்பீட்டு நிவாரண இழப்பீடாக தலா 1 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
ஆக்கப்பூர்வமிக்க செயற்கை நுண்ணறிவு (Gen AI) பற்றிய சர்வதேச மாநாடு ஆனது கொச்சியில் நடைபெறவுள்ளது.
இந்திரா காந்தி தேசிய கலை மையம் (IGNCA) மற்றும் சன்சத் TV ஆகியவை இந்தியக் கலை மற்றும் கலாச்சாரத்தை அணுகக் கூடியதாக மாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
அசாம் மாநில அரசாங்கமானது இளம் வயது சிறுமிகள் பள்ளிக்குச் செல்வதனை ஊக்குவிப்பதற்கும், அவர்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்வதைத் தடுப்பதற்கும் உதவுகிற வகையில் முக்கிய மந்திரி நிஜுத் மொய்னா (MMNM) திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு ஆனது, நடைப்பாணி மற்றும் எலும்புக் கூடு போன்ற மாறாத உடலியல் அளவுருக்களுடன் முக அடையாளம் காணல் நுட்பத்தினை ஒருங்கிணைக்கும் "திவ்ய த்ரிஷ்டி" என்ற செயற்கை நுண்ணறிவுக் கருவியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
ஸ்ருதி வோரா, ஸ்லோவேனியாவின் லிபிகா நகரில் நடைபெற்ற FEI டிரஸ்ஸேஜ் (குதிரையேற்றம்) உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், மூன்று நட்சத்திர கிராண்ட் பிரிக்ஸ் குதிரையேற்றப் போட்டியில் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்கப் பாராளுமன்றம் ஆனது சிரில் இராமபோசாவை தென்னாப்பிரிக்க அதிபராக மீண்டும் தேர்வு செய்துள்ளது.
உலக சுகாதார அமைப்பானது (WHO) ஐதராபாத்தில் உள்ள தேசிய இந்திய மருத்துவ பாரம்பரியக் கல்வி நிறுவனத்தினை (NIIMH) பாரம்பரிய மருத்துவ ஆராய்ச்சிக்கான 3வது இந்திய WHO கூட்டுறவு மையமாக (CC) நியமித்துள்ளது.
முன்னதாக இது ஆயுர்வேதக் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்கான கல்வி நிறுவனம், ஜாம்நகர் மற்றும் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா கல்வி நிறுவனம் (MDNIY), புது டெல்லி ஆகியவற்றை நியமித்தது.