TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 20 , 2024 11 days 97 0
  • ஆரக்கிள் நிறுவனமானது மாநில இளைஞர்களுக்கு பல்வேறு தகவல் தொழில்நுட்பத் திறன்களை வழங்கி வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் கைகோர்த்துள்ளது.
  • இந்திய இரயில்வே நிர்வாகமானது, பல இடங்களில் நடைபெற்ற அரசின் சேவைகளில் அதிக எண்ணிக்கையிலான மக்களை ஈடுபடுத்தியதற்காக என்று லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
  • இந்தியா தனது சொந்த ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்தினைக் கொண்ட ஆறாவது நாடாக மாற உள்ளது.
  • மஹாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயியும், AGRO RANGERS நிறுவனத்தின் நிறுவனருமான சித்தேஷ் சாகோர், பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடச் செய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கை (UNCCD) அமைப்பினால் நில வளங்காப்பு நாயகர் என்று பெயரிடப்பட்டுள்ளார்.
  • ஐக்கியப் பேரரசின் மத்திய வங்கியானது, இந்திய ரிசர்வ் வங்கிக்கு '2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த இடர் மேலாண்மை நிறுவனம்’ என்ற விருதினை வழங்கியுள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் அல்பனா கில்லாவாலா, “A Fly on the RBI Wall: An Insider’s View of the Central Bank” என்ற புத்தகத்தினை எழுதியுள்ளார்.
  • தந்தையர் தினம் ஆனது ஆண்டுதோறும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கி ழமையன்று கொண்டாடப்படுகிறது.
    • இந்த ஆண்டு இத்தினம் ஜூன் 16 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்