TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 23 , 2024 8 days 92 0
  • கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து அதிக எண்ணிக்கையில் நபர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஒரு முழுமையான விசாரணை நடத்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி P. கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர்  ஆணையம் ஒன்றைத் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
  • கேரள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி S. மணி குமார், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் (SHRC) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்தியப் பொது விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) ஆனது, சமீபத்தில் இந்தியப் பொது விமானப் போக்குவரத்தில் பாலினச் சமத்துவத்தினை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய ஆலோசனை சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
    • இது 2023 ஆம் ஆண்டிற்குள் குறைந்தது 25% பெண்கள் வெவ்வேறு விமானப் போக்குவரத்து பணிகளில் பணிபுரிகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதியன்று உலக இசை தினம் அனுசரிக்கப் படுகிறது.
  • ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதியன்று, மனிதநேயத்தை ஒரு தத்துவ வாழ்க்கை நிலைப்பாடாகவும், உலகில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறையாகவும் கருத்தில் கொள்வதற்கான விழிப்புணர்வை பரப்புவதற்காக உலக மனிதநேய தினம், கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்