TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 24 , 2024 152 days 194 0
  • சங்கரா கண் அறக்கட்டளை நிறுவனமானது, அதிநவீன ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் பயிற்சி வழங்கீடு மூலம் கண் நலச் சிகிச்சை சேவைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையிலான நாட்டின் முதல் வகையிலான புத்தாக்க ஆய்வகத்தினைத் தொடங்கியுள்ளது.
  • கல்வியாளர், நடனக் கலைஞர், இசைக்கலைஞர், நடன இயக்குனர் மற்றும் மிகப் பெரும் வழிகாட்டியான CVC அல்லது சந்துரு அண்ணா என்று குறிப்பிடப்படுகின்ற C.V. சந்திரசேகர் சமீபத்தில் காலமானார்.
  • 2024 ஆம் ஆண்டு தேசிய யோகா ஒலிம்பியாட் போட்டியானது, கர்நாடகாவின் மைசூரு நகரில் தொடங்கப்பட்டது.
  • ஐக்கியப் பேரரசு (UK) ஆனது, சீன நாட்டினைப் பின்னுக்கு தள்ளி இந்தியாவின் நான்காவது பெரிய ஏற்றுமதிச் சந்தையாக மாறியுள்ளது.
  • இந்திய-அமெரிக்கரான சுஹாஸ் சுப்ரமணியம் விர்ஜீனியா மாகாணத்தின் காங்கிரஸின் (பொதுச் சபை) தொகுதிக்கான ஜனநாயகக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
    • அவர் 2019 அம் ஆண்டில் விர்ஜீனியா மாகாணத்தின் பொதுச் சபைக்கு தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் இந்திய-அமெரிக்கன், தெற்காசிய மற்றும் இந்து நபர் என்ற பெருமையினைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்