TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 25 , 2024 23 days 142 0
  • தமிழக அரசானது, பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகவும், அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கு ஊக்குவிப்பதற்காகவும் ‘மகளிரால் இயக்கப்படும் மூன்று சக்கர வாகனச் சேவையினை’ சென்னை நகரில் பிங்க் ஆட்டோக்கள் (Pink Autos) என்ற பெயரில் அறிமுகப் படுத்தியுள்ளது.
    • 200 மகளிர் மூன்று சக்கர (ஆட்டோ) வாகன ஓட்டுநர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படவுள்ளது.
  • இந்திய தொழில் துறைக் கூட்டமைப்பு (CII) ஆனது, அதன் மத்திய நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டுப் பரிந்துரைகளில் 'ஏஞ்சல் வரிகள்-புத்தொழில் நிறுவனங்களின் மிகை மதிப்பு வரி’ எனப்படும் வருமான வரிச் சட்டத்தின் 56(2)(viib) பிரிவினை அகற்ற பரிந்துரைத்துள்ளது.
  • சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் (ILC) 112வது அமர்வு ஆனது ஜெனீவாவில் உள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) தலைமையகத்தில் நடைபெற்றது.
  • OpenAI நிறுவனத்தின் மிகப்பெரியப் போட்டியாளரான Anthropic நிறுவனம் ஆனது, Claude 3.5 Sonnet எனப்படும் அதன் சமீபத்தியச் செயற்கை நுண்ணறிவு மாதிரியினை அறிமுகப் படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்