முன்மொழியப்பட்டுள்ள கோதாவரி-காவிரி நதி நீர் இணைப்புத் திட்டத்தின் கீழ், சென்னை நகரத்திற்கான குடிநீர் மற்றும் தொழில்துறை தேவைகளுக்காக சுமார் 10 ஆயிரம் மில்லியன் கன அடி (ஆயிரம் மில்லியன் கன அடி) நீர் ஒதுக்கீடு செய்யப் பட்டு உள்ளது.
1,000 மகளிர் மற்றும் திருநர்கள் சமூகத்தினைச் சேர்ந்த மூன்று சக்கர வாகன ஓட்டுநர்களுக்குப் புதிய தானியங்கி மூவுருளி உந்து (ஆட்டோ) வாகனம் வாங்குவதற்காக 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனைப் பெற அவர்கள் தமிழ்நாடு ஓட்டுநர்கள் மற்றும் வாகன தொழில் பட்டறை தொழிலாளர்கள் நல வாரியத்தில் தங்களைப் பதிவு செய்திருக்க வேண்டும்.
சோமாலியாவின் அனைத்து மகளிர் செய்திக் குழுவான பிலன், 2024 ஆம் ஆண்டிற்கான ஒன் வேர்ல்டு ஊடக செய்தியாளர் சுதந்திர விருதினை வென்றுள்ளதை அடுத்து, இந்த கௌரவ விருதினைப் பெறும் முதல் சோமாலிய ஊடகக் குழுவாக அது மாறியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள கைம்பெண்களின் உரிமைகளை அங்கீகரிப்பதற்காகவும், சமுதாயத்தில் இந்தப் பிரிவினரின் நலனுக்காக இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஜூன் 23 ஆம் தேதியன்று சர்வதேச கைம்பெண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
அரசு முறை நடவடிக்கைகளில் பெண்களின் பங்களிப்பைச் சிறப்பிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 24 ஆம் தேதியன்று சர்வதேச அரசுமுறை நடவடிக்கைகளில் பெண்களின் பங்கு தினம் கொண்டாடப் படுகிறது.