TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 26 , 2024 4 days 86 0
  • முன்மொழியப்பட்டுள்ள கோதாவரி-காவிரி நதி நீர் இணைப்புத் திட்டத்தின் கீழ், சென்னை நகரத்திற்கான குடிநீர் மற்றும் தொழில்துறை தேவைகளுக்காக சுமார் 10 ஆயிரம் மில்லியன் கன அடி (ஆயிரம் மில்லியன் கன அடி) நீர் ஒதுக்கீடு செய்யப் பட்டு உள்ளது.
  • 1,000 மகளிர் மற்றும் திருநர்கள் சமூகத்தினைச் சேர்ந்த மூன்று சக்கர வாகன ஓட்டுநர்களுக்குப் புதிய தானியங்கி மூவுருளி உந்து (ஆட்டோ) வாகனம் வாங்குவதற்காக 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • இதனைப் பெற அவர்கள் தமிழ்நாடு ஓட்டுநர்கள் மற்றும் வாகன தொழில் பட்டறை தொழிலாளர்கள் நல வாரியத்தில் தங்களைப் பதிவு செய்திருக்க வேண்டும்.
  • சோமாலியாவின் அனைத்து மகளிர் செய்திக் குழுவான பிலன், 2024 ஆம் ஆண்டிற்கான ஒன் வேர்ல்டு ஊடக செய்தியாளர் சுதந்திர விருதினை வென்றுள்ளதை அடுத்து, இந்த கௌரவ விருதினைப் பெறும் முதல் சோமாலிய ஊடகக் குழுவாக அது மாறியுள்ளது.
  • உலகெங்கிலும் உள்ள கைம்பெண்களின் உரிமைகளை அங்கீகரிப்பதற்காகவும், சமுதாயத்தில் இந்தப் பிரிவினரின் நலனுக்காக இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஜூன் 23 ஆம் தேதியன்று சர்வதேச கைம்பெண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • அரசு முறை நடவடிக்கைகளில் பெண்களின் பங்களிப்பைச் சிறப்பிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 24 ஆம் தேதியன்று சர்வதேச அரசுமுறை நடவடிக்கைகளில் பெண்களின் பங்கு தினம் கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்