TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 27 , 2024 4 days 63 0
  • விருதுநகரில் உள்ள காரியாபட்டி, மல்லாங்கிணறு காவல் நிலையங்கள் சமீபத்தில் ISO (ISO 9001 : 2015) தரச்சான்றிதழைப் பெற்றுள்ளன.
  • தமிழ்நாடு அரசானது, ஆறாம் வகுப்பிலிருந்து செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அடிப்படை கணினி அறிவியலை அறிமுகப்படுத்த உள்ளது.
  • 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள சிறுமிகளுக்கு மனம், உடல் மற்றும் சமூகப் பிரச்சனைகளைச் சமாளிக்க உதவும் வகையில் மகளிர் ஆசிரியர்களைக் கொண்ட குழுக்களை அமைக்க வழிவகுக்கும் ‘அகல் விளக்கு’ என்ற திட்டத்தினைத் தமிழ்நாடு அரசானது தொடங்க உள்ளது.
  • முதலமைச்சரின் கிராமப்புறச் சாலை மேம்பாட்டுத் திட்டங்களின் மீதான இரண்டாம் கட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் மொத்தம் 10,000 கிலோ மீட்டர் சாலைகள் மேம்படுத்தப் பட உள்ளன.
    • 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் 8,120 கிலோ மீட்டர் நீள சாலைகளின் மேம்பாட்டுப் பணிகள் நிறைவு செய்யப் பட்டுள்ளன.
  • இஸ்ரோ நிறுவனமானது, கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள வானியல் சோதனை தளத்தில் (ATR) புஷ்பக் எனப்படும் மூன்றாவது மறுபயன்பாட்டு ஏவுகணையின் (RLV) தரையிறங்கும் பரிசோதனையை (LEX) நிறைவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்