TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 29 , 2024 2 days 53 0
  • 2021 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன், சாதி வாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பினையும் நடத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • பாஜகவின் தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான J.P. நட்டா, மாநிலங்களவையின் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • செயற்கை நுண்ணறிவிற்காக பிரத்தியேகமாக இயங்கும் இந்தியாவின் முன்னணி நிறுவனமான உலக செயற்கை நுண்ணறிவுப் பல்கலைக்கழக (UAIU) நிர்வாகமானது சர்வதேச உத்தியியல் நிபுணரும் விருது பெற்ற பேராசிரியருமான சைமன் மேக் என்பவரை அதன் துணைவேந்தராக நியமித்துள்ளது.
    • இவர் இந்திய நிறுவனமொன்றின் ஸ்தாபக துணைவேந்தர் பதவியை வகிக்கும் முதல் இந்தியர் அல்லாதவர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • இந்தியக் கிரிக்கெட் வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக சதம் அடித்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை பெற்று உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்