2021 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன், சாதி வாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பினையும் நடத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாஜகவின் தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான J.P. நட்டா, மாநிலங்களவையின் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவிற்காக பிரத்தியேகமாக இயங்கும் இந்தியாவின் முன்னணி நிறுவனமான உலக செயற்கை நுண்ணறிவுப் பல்கலைக்கழக (UAIU) நிர்வாகமானது சர்வதேச உத்தியியல் நிபுணரும் விருது பெற்ற பேராசிரியருமான சைமன் மேக் என்பவரை அதன் துணைவேந்தராக நியமித்துள்ளது.
இவர் இந்திய நிறுவனமொன்றின் ஸ்தாபக துணைவேந்தர் பதவியை வகிக்கும் முதல் இந்தியர் அல்லாதவர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக சதம் அடித்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை பெற்று உள்ளார்.