வெளியுறவுத் துறை அமைச்சகமானது, 1967 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதியன்று கடவுச் சீட்டுச் சட்டம் இயற்றப் பட்டதைக் குறிக்கும் வகையில் 2024 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதியன்று 12வது கடவுச் சீட்டு சேவை தினத்தினை அனுசரித்தது.
தமிழ்நாட்டின் தொழில் நகரமான ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக முதல்வர் அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
ICICI வங்கி லிமிடெட் நிறுவனமானது, 100 பில்லியன் டாலர் (8.4 லட்சம் கோடி ரூபாய்) சந்தை மூலதனத்தினை எட்டிய ஆறாவது இந்திய நிறுவனமாக மாறியுள்ளது.
பராகுவே நாடானது, அதிகாரப்பூர்வமாக சர்வதேச சூரிய சக்திக் கூட்டணியின் (ISA) 100வது முழு உறுப்பினராக மாறியது.