கலைஞர் விளையாட்டுக் கருவிகள் தொகுப்பு வழங்கீட்டுத் திட்டத்தினை நகரப் பஞ்சாயத்துகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு விரிவுபடுத்துவதாகவும், 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, இத்திட்டம் ஊராட்சிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்தது.
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விற்கு (நீட்) எதிராக தமிழக சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதை ரத்து செய்ய மத்திய அரசினை அது வலியுறுத்தியது.
நீட் தேர்விற்கு முன்னதாக, 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மேற் கொள்ளப்பட்ட மருத்துவச் சேர்க்கையை மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும் என இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் கபில் தேவ், இந்தியாவின் தொழில்முறை கோல்ஃப் சுற்றுப்பயணத்தின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
பீகார் துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தினை சீரமைப்பதற்கான அமைச்சர்கள் குழுவின் (GoM) ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.
மத்திய அரசு ஆனது, மஷகான் கப்பல் கட்டும் நிறுவனத்திற்கு 'நவரத்னா' அந்தஸ்து வழங்கியுள்ளது.
இந்தியாவில் ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் இந்திய நிர்வாகங்களுக்கு இடையே தபால் துறையில் உறவுகளை வலுப்படுத்துவதற்காக ‘இந்தியா ஆப்பிரிக்கா தபால் துறை தலைவர்கள் சந்திப்பு’ ஆனது ஏற்பாடு செய்யப்பட்டது.
இது சர்வதேச அஞ்சல் ஒன்றியத்தின் ‘தெற்கு தெற்கு முத்தரப்பு ஒத்துழைப்பு’ என்ற முயற்சியின் கீழ் மேற்கொள்ளப் பட்டது.
உலகளாவிய நிதி சார் குற்றக் கண்காணிப்புக் குழுவான நிதியியல் நடவடிக்கைக் குழுவானது (FATF), சிறப்பு ஆய்வு தேவைப்படும் நாடுகளின் "சாம்பல் நிறப் பட்டியலில்" இருந்து துருக்கியை நீக்கியுள்ளது.
வெப்பமண்டல அன்னாசிப்பழ வகையினையும், நம் வாழ்வில் அதன் பல பங்களிப்புகளைக் கௌரவிக்கும் வகையில் ஜூன் 27 ஆம் தேதியன்று சர்வதேச அன்னாசி தினம் அனுசரிக்கப்படுகிறது.
நமது நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் காப்பீடு துறை வகிக்கும் முக்கியப் பங்கை நினைவூட்டும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 28 ஆம் தேதியன்று தேசியக் காப்பீட்டு விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.