TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 8 , 2024 139 days 196 0
  • யுனெஸ்கோ உலக பாரம்பரியக் குழுவின் 46வது அமர்வு ஆனது, புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியாவினால் நடத்தப்பட உள்ளது.
  • நொமாடிக் எலேஃபான்ட் 2024 (நாடோடி யானை) எனப்படும் இந்தியா-மங்கோலியா இடையிலான 16 வது கூட்டு இராணுவப் பயிற்சி மேகாலயாவின் உம்ரோயில் உள்ள வெளிநாட்டுப் பயிற்சி முனையில் தொடங்கியது.
  • அஸ்வின் இராமசுவாமி, ஜார்ஜியா மாகாண மேலவைத் தொகுதிக்கு மாவட்டம் 48 என்ற பகுதியில் போட்டியிடும் Z தலைமுறையினைச் சேர்ந்த முதல் (1995-2012 ஆம் காலக் கட்டத்தில் பிறந்தவர்) இந்திய-அமெரிக்க வேட்பாளர் ஆவார்.
  • மூத்த இந்தியத் தகவல் பணி அதிகாரி திரேந்திர K. ஓஜா மத்திய அரசின் முதன்மை செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) தலைவர் ஹேமந்த் சோரன் மூன்றாவது முறையாக ஜார்க்கண்ட் மாநில முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.
  • உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நிகழ்ந்த சத்சங்கத்தின் போது (இந்து மதப் பண்டிகை) ஏற்பட்ட நெரிசலில் சுமார் 120 பேர் கொல்லப்பட்டனர்.
  • உலக கைவினைக் கழகத்தினால் (WCC) ‘உலக கைவினை நகரம்’ என அங்கீகரிக்கப் பட்ட நான்காவது இந்திய நகரமாக ஸ்ரீநகர் மாறியுள்ளது.
    • ஜெய்ப்பூர், மலப்புரம் மற்றும் மைசூர் ஆகிய மூன்று இந்திய நகரங்கள் முன்னதாக உலக கைவினை நகரங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
  • எழுத்தாளர், விமர்சகர் மற்றும் பெண்ணிய ஆர்வலர் P. கீதாவிற்கு முதலாவது K. சரஸ்வதி அம்மா விருது வழங்கப்பட்டுள்ளது.
    • இது பெண்ணிய ஆய்வுகளுக்காக கேரளாவில் உள்ள WINGS (விளையாட்டுத் துறை மூலமான பெண்கள் ஒருங்கிணைப்பு மற்றும் வளர்ச்சி) அமைப்பால் நிறுவப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்