TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 10 , 2024 8 days 78 0
  • இந்திய அரசானது புது டெல்லியில் உலகளாவிய இந்தியாAI என்ற உச்சி மாநாட்டினை' நடத்தியது.
  • வரவிருக்கும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான 28 பேர் கொண்ட இந்திய தடகள வீரர்கள் அணிக்கு ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தலைமை தாங்க உள்ளார்.
  • சர்வதேச பால் பொருட்கள் தொழில்துறை கூட்டமைப்பின் முதலாவது 2024 ஆம் ஆண்டு ஆசிய பசிபிக் பிராந்திய பால் பொருட்கள் தொழில்துறை மாநாடு ஆனது கொச்சியில் நடைபெற்றது.
  • பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஆனது உலகிலேயே முதல் முறையாக CNG எரிபொருளில் இயங்கும், இரட்டை எரிபொருள் நிரப்புக் கல அமைப்புடன் கூடிய (பெட்ரோல் மற்றும் CNG எரிபொருள்) ஃப்ரீடம் 125 எனப்படும் இரு சக்கர வாகனத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது.
  • JM Financial நிறுவனத்தின் எண்ணிம வழி பங்குச் சந்தை தரகுப் பிரிவான BlinkX, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காகவும் வாடிக்கையாளர்களின் பங்குச் சந்தை அனுபவங்களை நன்கு மேம்படுத்துவதற்காகவும் மும்பையில் BlinkX Gen AI ஆய்வகத்தினை அமைத்துள்ளது.
  • பெங்களூரில் உள்ள டாக்டர் ஷ்யாமா நரங் அறக்கட்டளையானது, நிம்ஹான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, மோட்டார் நியூரான் நோய் (தசையூட்டமற்ற பக்க மரப்பு நோய்) குறித்த மூன்றாம் ஆண்டு மாநாட்டினை நடத்துகிறது.
    • இந்த நிகழ்வின் கருத்துரு, "MND/ALS பற்றிய விழிப்புணர்வு, மருத்துவ நலன் மற்றும் மேலாண்மை" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்