இந்திய அரசானது புது டெல்லியில் உலகளாவிய இந்தியாAI என்ற உச்சி மாநாட்டினை' நடத்தியது.
வரவிருக்கும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான 28 பேர் கொண்ட இந்திய தடகள வீரர்கள் அணிக்கு ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தலைமை தாங்க உள்ளார்.
சர்வதேச பால் பொருட்கள் தொழில்துறை கூட்டமைப்பின் முதலாவது 2024 ஆம் ஆண்டு ஆசிய பசிபிக் பிராந்திய பால் பொருட்கள் தொழில்துறை மாநாடு ஆனது கொச்சியில் நடைபெற்றது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஆனது உலகிலேயே முதல் முறையாக CNG எரிபொருளில் இயங்கும், இரட்டை எரிபொருள் நிரப்புக் கல அமைப்புடன் கூடிய (பெட்ரோல் மற்றும் CNG எரிபொருள்) ஃப்ரீடம் 125 எனப்படும் இரு சக்கர வாகனத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது.
JM Financial நிறுவனத்தின் எண்ணிம வழி பங்குச் சந்தை தரகுப் பிரிவான BlinkX, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காகவும் வாடிக்கையாளர்களின் பங்குச் சந்தை அனுபவங்களை நன்கு மேம்படுத்துவதற்காகவும் மும்பையில் BlinkX Gen AI ஆய்வகத்தினை அமைத்துள்ளது.
பெங்களூரில் உள்ள டாக்டர் ஷ்யாமா நரங் அறக்கட்டளையானது, நிம்ஹான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, மோட்டார் நியூரான் நோய் (தசையூட்டமற்ற பக்க மரப்பு நோய்) குறித்த மூன்றாம் ஆண்டு மாநாட்டினை நடத்துகிறது.
இந்த நிகழ்வின் கருத்துரு, "MND/ALS பற்றிய விழிப்புணர்வு, மருத்துவ நலன் மற்றும் மேலாண்மை" என்பதாகும்.