TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 31 , 2018 2281 days 736 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது (ISRO) துருவநிலை செயற்கைக் கோள் ஏவுவாகனம் (PSLV - Polar Satellite Launch Vehicle) மற்றும் சிறிய செயற்கைக் கோள் ஏவு வாகனம் (SSLV - Small Satellite Launch Vehicles) ஆகியவற்றை உற்பத்தி செய்யும் பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கவுள்ளது. திறன் கட்டமைப்பில் தனியார் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்சிவன் அறிவித்துள்ளார்.
  • மத்தியப் பிரதேசத்தில் நீர்ப்பாசனம் மற்றும் அமைப்பின் திறன் ஆகியவற்றை விரிவுபடுத்துவதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்துவதற்காக $375 மில்லியன் மதிப்புடைய கடன் ஒப்பந்தத்தை மத்திய அரசாங்கம் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB - Asian Development Bank) ஆகியவை இணைந்து கையெழுத்திட்டுள்ளன.
  • உயிரிதொழில்நுட்பத் துறை (DBT), மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் சர்வதேச ஆற்றல் முகமை (IEA - International Energy Agency) ஆகியவை தூய ஆற்றல் மாற்றத்திற்கான கண்டுபிடிப்புகளை மேம்படுத்துதல் மீதான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்தியாவில் தூய்மையான ஆற்றல் தொழில்நுட்பங்களின் ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் செயல்முறை விளக்கம் ஆகியவற்றை விரைவுபடுத்துவதற்காக தூய ஆற்றல் கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவாக ஒத்துழைப்பை அதிகரிக்க இது முயல்கிறது.
  • அஸ்ஸாம் மாநில ஆளுநர் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் 1958 (AFSPA - Armed Forces (Special Powers) Act)-ன் பயன்பாட்டை மாநிலம் முழுவதும் அடுத்த 6 மாத காலத்திற்கு நீட்டித்துள்ளார். இது உடனடியாக அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளார்.
  • தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேசியக் குடிமக்கள் பதிவேட்டின் திருத்தச் செயல்முறையின்போது சட்ட ஒழுங்கைப் பராமரிப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • உலக தகவல் தொழில்நுட்ப நிறுவனமான IBM ஆனது தனது “Call for Code” என்ற புது முயற்சிக்காக இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் (பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ், இன்வெஸ்ட் இந்தியா, கேப்ஜெமினி மற்றும் நாஸ்காம்) இணைந்துள்ளது. Call for Code-ன் நோக்கமானது பேரிடர் மேலாண்மைக்கான உலகத் தீர்வுகளை உருவாக்குவதாகும்.
  • அருணாச்சல பிரதேச மாநில சட்டசபையானது மாநிலத்தில் 3 புதிய மாவட்டங்களை (பக்கே - கெசாங், லோபா ராடா, ஷீ யோமி) உருவாக்குவதற்கான மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
  • மத்திய மின்சாரத் துறை மற்றும் புதிய & புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் அமைச்சகத்தின் இணை அமைச்சர்K.சிங் ‘இந்திய மின் அமைப்பிற்கான வானிலைத் தகவல் வாயில்‘ என்ற ஆவணத்தை வெளியிட்டார்.
    • மின்துறையின் அனைத்து பிரிவுகளிலும் வானிலை வாயிலின் மேம்பட்ட பயன்பாட்டை அளிப்பதற்காக IMD (India Meteorological Department) உடன் இணைந்து POSOCO (Power System Operation Corporation) இந்த ஆவணத்தை தயாரித்துள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்