சிறார் நீதி வாரியத்திற்கான (JJB) சமூக சேவகர் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் மற்றும் குழந்தைகள் நலக் குழுவின் (CWC) தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகவும் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி K.P.K. வாசுகி தலைமையில் தமிழக அரசானது ஒரு தேர்வுக் குழுவை அமைத்து உள்ளது.
கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளம் & பொறியியல் (GSRE) லிமிடெட் நிறுவனத்திற்கு, 2024 ஆம் ஆண்டு கிரகத்தின் நிலைத்தன்மைக் குறித்த கண்ணோட்டம் மீதான உச்சி மாநாடு மற்றும் விருதுகள் "நிலையான ஆளுகை வாகையர் விருது" வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளது.
OpenAI நிறுவனம் வலுவூட்டப்பட்ட கற்றலின் போது மனித கருத்துரைப்புகளிலிருந்து பெறப்பட்ட தவறுகளைக் கண்டறிய மனிதப் பயிற்சியாளர்களுக்கு உதவுவதற்காக, ChatGPT பதிலுரைப்புகளின் விமர்சனங்களை எழுதுவதற்காக வேண்டி சமீபத்தில் GPT4 அடிப்படையிலான CriticGPT எனப்படும் புதிய மாதிரியினை அறிவித்துள்ளது.
அதானி குழுமம் ஆனது, 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்காக பாரீஸ் நகர் செல்லும் இந்திய அணிக்கு நிதியுதவி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இறகுப் பந்தாட்ட வீராங்கனை P.V. சிந்து இந்தியக் கொடி ஏந்தி இந்திய அணியினை வழி நடத்தும் வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உக்ரைனைச் சேர்ந்த யாரோஸ்லாவா மஹுசிக் என்ற பெண் உயரம் தாண்டுதலில் அதிக உயரம் பாய்ந்து (2.10 மீ) உலக சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முந்தைய சாதனை (2.09 மீ) ஆனது 1987 ஆம் ஆண்டில் பதிவு செய்யப் பட்டது.