TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 15 , 2024 3 days 104 0
  • கள்ளச்சாராய உற்பத்தி, விற்பனை மற்றும் வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கான அபராதங்களை அதிகரிப்பதற்காக என்று 1937 ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தமிழ்நாடு மாநில அரசின் திருத்தங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
  • டாடா பரஸ்பர நிதியம் ஆனது, டாடா நிஃப்டி இந்தியா சுற்றுலாக் குறியீடு நிதியினைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
    • இது இந்தியாவின் இம்மாதிரியான முதல் வகையாகும்.
  • 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ககன் நரங், மேரி கோமிற்குப் பதிலாக 2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் அணிப் பொறுப்பாளாராக (செஃப்-டி-மிஷன்) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் நாடுகளின் பேச்சுவார்த்தையின் மூலமாக உருவாக்கப் பட்ட "இழப்பு மற்றும் சேதம்" நிதியத்தின் குழுவினை நடத்துவதற்கு பிலிப்பைன்ஸ் நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • இது புவி வெப்பமடைதலின் தாக்கத்திலிருந்து மீண்டு, மறு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள உதவும் வகையில் நாடுகளுக்கு நிதியுதவி வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்