TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 16 , 2024 3 days 58 0
  • ஓய்வு பெற்ற பேராசிரியர் K. சொக்கலிங்கம், பல்வேறு குற்றங்களால் பாதிக்கப் பட்டவர்களின் மன நிலை குறித்த ஆய்வியல் துறைக்கு அவர் ஆற்றிய மிகப்பெரும் பங்களிப்பிற்காகப் பெரு மதிப்புமிக்க ஹான்ஸ் வான் ஹென்டிக் என்ற விருது வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளார்.
  • கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாத காலக் கட்டத்தில் 32,909 மில்லியன் அலகுகளாக இருந்த தமிழகத்தின் மின் நுகர்வு 2024 ஆம் ஆண்டின் அதே காலக் கட்டத்தில் 7% அதிகரித்து 35,385 மில்லியன் அலகுகளாக அதிகரித்துள்ளது.
  • சமீபத்தில், உத்தரப் பிரதேசத்தின் அவாத் நகரில் மூன்று நாட்கள் அளவிலான மாம்பழத் திருவிழாவானது நடைபெற்றது.
  • X தளத்தில் நரேந்திர மோடி அவர்களின் சமூக ஊடகப் பக்கத்தினைப் பின் தொடரச் செய்பவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டியதையடுத்து, இவர்  மிக அதிகமாக பின் தொடரப்படும் உலகத் தலைவர் ஆக விளங்குகிறார்.
  • செயின்ட் பீட்டர்ஸ்பர்க் (ரஷ்யா) நகரில் நடைபெற்ற சர்வதேச மணல் சிற்ப சாம்பியன் ஷிப் போட்டியில் இந்திய மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் தங்கப் பதக்கத்துடன் கூடிய தங்க மணல் சிற்ப ஆசான் (மாஸ்டர்) விருதினை வென்று உள்ளார்.
  • நீதிபதி ஆலியா நீலும் லாகூர் உயர் நீதிமன்றத்தில் பாகிஸ்தானின் முதல் பெண் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்